தமிழ்நாடு

tamil nadu

மாமல்லபுரத்தில் பூதேவி உலோக சாமி சிலை மீட்பு: இருவர் கைது

By

Published : Nov 28, 2020, 10:33 PM IST

சென்னை: மாமல்லபுரம் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான பூதேவி உலோக சாமி சிலையை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீட்டனர்.

Sami statue recovered
Sami statue recovered

சென்னை மாமல்லபுரம் ஈ.சி.ஆர் சாலை பக்கிங்ஹாம் கெனால் பாலம் அருகே சிலை கடத்தல் நடப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், பையை சோதனை செய்தனர். அதில் ஒன்றரை அடி உயரம் கொண்ட பூதேவி உலோக சாமி சிலை ஒன்று இருந்தது. சிலைக்கான தகுந்த ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டத்தச் சேர்ந்த வேல்குமார்(33), செல்வம்( 38) என்பது தெரியவந்தது. இந்த சிலையானது கோயிலில் இருந்து திருடப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்க கொண்டுச் சென்ற போது இருவரும் கைதாகினர்.

இந்தச் சிலை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்றும் இவர்கள் யாரிடம் சிலையை விற்க சென்றனர் என பல்வேறு கோணங்களில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பின்னர் இருவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க:ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details