தமிழ்நாடு

tamil nadu

பி.இ, பி.டெக், தொழிற்கல்விக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

By

Published : Sep 27, 2021, 2:56 PM IST

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பு மற்றும் தொழிற்கல்வியில் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

கலந்தாய்வு தொடக்கம்
கலந்தாய்வு தொடக்கம்

சென்னை:பிஇ,பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று (செப்.27) தொடங்கி அக்டோபர் 17ஆம் தேதி வரையில் நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறவிருக்கிறது.

முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் இன்றும், நாளையும் கலந்தாய்விற்கான கட்டணத் தொகை 5,000 ரூபாயை செலுத்தலாம்.

பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் பாடப்பிரிவில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 1 லட்சத்து 74 ஆயிரத்து 490 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். அதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினர்.

தர வரிசைப் பட்டியல்

அதனைத் தொடர்ந்து தகுதியான 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கான கலந்தாய்வு அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்விற்கான பணம் செலுத்துவதற்கு இரண்டு நாட்களும், கல்லூரிகளை தேர்வு செய்ய இரண்டு நாட்களும், தற்காலிக ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய இரண்டு நாளும், இறுதி ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய ஒரு நாளும், ஒவ்வொரு சுற்றுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

4 சுற்றுகளாக கலந்தாய்வு

தரவரிசைப் பட்டியிலில் 1 முதல் 14,788 வரை பெற்றவர்களுக்கு இன்று (செப்.27) முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையில் முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

தரவரிசைப்பட்டியிலில் 14,789 முதல் 45,227 வரை பெற்றவர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரையில் இரண்டாவது சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

தரவரிசைப்பட்டியிலில் 45,228 முதல் 86,228 வரை பெற்றவர்களுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரையில் மூன்றாவது சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

தரவரிசைப்பட்டியிலில் 86,229 முதல் 1,36,973 வரை பெற்றவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரையில் நான்காவது சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதேபோல் தொழிற்கல்விப் பிரிவில் சேர உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை சென்னையிலே விசாரிக்கலாம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details