தமிழ்நாடு

tamil nadu

நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி.. விமானத்தில் நடந்து என்ன?

By

Published : Mar 8, 2023, 1:24 PM IST

வங்கதேசத்தை சேர்ந்த பெண், புற்றுநோய் சிகிச்சைக்காக கணவருடன், டாக்காவில் இருந்து, விமானத்தில் வந்தவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடிரென நெஞ்சுவலியால், விமானத்தில் உயிரிழப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை:வங்கதேசத்தை சேர்ந்தவர் முகமது அபு. இவரது மனைவி குர்ஸிதா பேகம் ( வயது 43). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் பல மருத்துவமனைகளில் குர்ஸிதா பேகம் சிகிச்சை பெற்றார்.

ஆனால், நோய் குணமடையவில்லை என்பதால் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக முகமது அபு, தனது மனைவி குர்ஸிதா பேகத்தை அழைத்துக் கொண்டு, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்துக்கொண்டிருந்தார்.

விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது, குர்ஸிதா பேகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். இதை அடுத்து, கணவர் பதற்றத்துடன் விமான பணிப்பெண்களிடம் கூறினார். அவர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர்.உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சென்னை விமான நிலையத்தில் மருத்துவ குழுவை தயார் நிலையில் வைக்கும்படி கூறினார்.

இதையும் படிங்க: 139 அரசுப்பள்ளிகள் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

இந்த பரபரப்பான சூழலில் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினர், விமானத்திற்குள் சென்று குர்ஸிதாவை பரிசோதித்தனர்.ஆனால் அவர் தனது இருக்கையில் அமர்ந்தபடி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலைய காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு 174 பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். உடற்குறு ஆய்வுக்கு பின் உடலை வங்கதேசம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details