தமிழ்நாடு

tamil nadu

அரசு நில ஆக்கிரமிப்பை திமுக அரசு தடுக்குமா அல்லது துணை நிற்குமா - அறப்போர் இயக்கம் கேள்வி!

By

Published : Aug 21, 2023, 6:51 PM IST

Arappor iyakkam: அரசு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சட்ட போராட்டம் எப்படி நடத்த வேண்டும், அதற்கு எவ்வளவு காலம் பிடிப்பதுடன், அதனால் சந்திக்கும் சவால் எவ்வளவு என்பதை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் விளக்கியுள்ளார்.

Encroachment
Encroachment

சென்னை: சென்னை, ராமாபுரம் பகுதியில் கோவில் ஒன்றின் பெயரில் பல கட்சிகளை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் இணைந்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்து அறப்போர் இயக்கம் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் அரசு நிலங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சென்னை, ராமாபுரம் பகுதியில் கோவில் ஒன்றின் பெயரில் பல கட்சிகளை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் இணைந்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். அரசு நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அறப்போர் இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்காக ராமாபுரம் காவல்துறை ஆய்வாளர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள், அறப்போர் இயக்கத்தின் நிர்வாகி நக்கீரன் மீது பொய் வழக்கு போட்டு அதிகாலையில் தீவிரவாதியை போல கைது செய்தனர். அரசு இடம் தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியல் கட்சிகளை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக மக்களுடன் இணைந்து ஒரு சட்ட போராட்டம் எப்படி நடத்த வேண்டும் என்பதையும், அதற்கு எவ்வளவு காலம் பிடிப்பதுடன், அதனால் சந்திக்கும் சவால்களையும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் விளக்கி உள்ளார்.

தற்பொழுது அந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வேலையை துவங்கி இருக்கின்றனர் எனவும், அரசு நிலம் என்று அரசாங்கம் தெளிவாக அறிவித்த பிறகும் ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தை கையகப்படுத்தும் ஆசையில் தங்கள் திருட்டுத்தனத்தை துவங்கி இருப்பதாகவும், இவர்களை திமுக அரசு தடுக்குமா? அல்லது இவர்களுக்கு துணை நிற்குமா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க:அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக நித்தியானந்தா ஆசிரமம் அகற்றம்.. வருவாய்த்துறை நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details