தமிழ்நாடு

tamil nadu

சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

By

Published : Mar 11, 2022, 11:55 AM IST

சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை ராஜாஜி சாலையில் சுங்கத்துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த தலைமை அலுவலகத்தில் நேற்று (மார்ச் 10) சுங்கத்துறையை கண்காணிக்கும் ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

கப்பல் மூலமாக வெளிநாட்டிற்கு பொருள்கள் அனுப்பும்போது சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஷிப்பிங் ஏஜெண்டுகள் கையெழுத்து பெற்று அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பணம் பெற்று அனுமதி வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஒவ்வொரு அறைகளிலும், பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னரே அனைத்துப் பொருள்களும் அனுப்பி வைக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அனுமதியளித்தனர்.

இந்த சோதனை மாலை 4.30 மணி முதல் இரவு 9 ணி வரை நடந்ததாக தெரிகிறது. சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த அதிரடி சோதனையால் சுங்கத்துறை இல்லம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க:ஆந்திரா டூ மதுரை: கிலோ கணக்கில் கஞ்சா கடத்தல்...

ABOUT THE AUTHOR

...view details