தமிழ்நாடு

tamil nadu

அண்ணா பல்கலைக்கழகம்: மாணவர்கள் 22ஆம் தேதி முதல் சேரலாம்

By

Published : Nov 2, 2020, 11:04 AM IST

Updated : Nov 2, 2020, 11:18 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் வரும் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி கல்லூரிகளில் சேர்ந்துக் கொள்ளலாம் என பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

anna university annouced first semester class opening date
anna university annouced first semester class opening date

சென்னை:பொறியியல் படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் கரோனா தொற்றுக் காரணமாக ஜூலையில் நடைபெற வேண்டிய கலந்தாய்வு தாமதமாக அக்டோபர் மாதம் தொடங்கியது.

தற்போது சிறப்புப் பிரிவு, தொழிற்பிரிவு, பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதில் பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் 9ஆம் தேதி தொடங்கப்படும்.

வகுப்புகள் துவங்கியப்பின்னர் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பின் மீது ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அறிமுகம் மற்றும் புத்தாக்க வகுப்புகள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முதல் பருவத்திற்கான வகுப்புகள் 23ஆம் தேதி தொடங்கி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பதற்காக சனிக்கிழமைகளிலும் கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறுமா? அல்லது கல்லூரிகளில் நேரிடையாக நடைபெறுமா? என்பது குறித்த தெளிவான தகவல்கள் இடம்பெறவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு (கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி) மட்டும் கட்டணம் செலுத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் aukdc.edu.in என்கிற இணையதளம் மூலம் இன்று முதல் 28ஆம் தேதி வரையில் கட்டணம் செலுத்தலாம் .

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் சேருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கட்டணம் செலுத்த மாணவர்கள் நேரில் வர வேண்டாம். கல்லூரியில் சேரும் மாணவர்கள் உரிய கல்லூரியில் சேருவதற்கான ஆவணங்களை அறிவிக்கப்படும் தேதியில் www.annauniv.edu என்கிற இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Last Updated : Nov 2, 2020, 11:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details