தமிழ்நாடு

tamil nadu

அண்ணா பல்கலைக்கழகத்தில் B.Voc மாணவர் சேர்க்கை.. வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் படிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 4:00 PM IST

Updated : Oct 24, 2023, 7:48 PM IST

Anna University: அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு B.Voc பட்டப்படிப்பிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

அண்ணா பல்கலை. துணைவேந்தர் செந்தியாளர்கள் சந்திப்பு

சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் B.Voc Logistics Managementமற்றும் B.Voc Footware manufacturing ஆகிய பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு வரும் 31ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கக்கூடிய திறன் மேம்பாட்டு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெற வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ், நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் B.Voc படிப்பு தொடங்குவது பற்றி அறிவித்தார்.

B.Voc பட்டப்படிப்பு அக்.31 கடைசி நாள்:அதன்படி B.Voc Logistics Management மற்றும் B.Voc Footware manufacturing என்ற இரண்டு புதிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களுக்கு இந்த படிப்பின் அருமை தெரியாமல் சேர்க்கை சரியாக நடைபெறவில்லை. அதனால், ஐந்து மாணவர்கள் மட்டுமே இப்படிப்புக்கு விண்ணப்பம் செய்தனர். காஞ்சிபுரம் மற்றும் ஆரணியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளன. இரண்டு பட்டப் படிப்புகளிலும் தலா 40 இடங்கள் வீதம் உள்ளன. இதில் மாணவர்கள் சேர்ந்து படித்து பயன்பெற வேண்டும். இந்த படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் அக்.31 ஆம் தேதி. ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான கல்லூரிகளில் அட்மிஷன் முடிந்த காரணத்தால் அது குறித்து தெரிவிக்க விரும்புகிறேன்.

படிக்கும்போதே பயிற்சியுடன் வேலைவாய்ப்பு:இந்த படிப்புகளுக்கு உலக அளவில் தேவை என்பது அதிகமாக உள்ளது. மேலும் அதனுடன், Sector skill council துணையுடன் இரு பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், வேலைவாய்ப்பு பிரச்சனை இருக்காது. பட்டப்படிப்பு ஆறு பருவங்களாக என மூன்று ஆண்டு நடத்தப்படும். மேலும் பட்டப்படிப்பிற்கு இணையானது. இந்தியாவில் 37 செக்டர் skill council உள்ளது. அவர்கள் துணையுடன் செயல்படுவதால் தொழிற்சாலைகளில் படிக்கும் போதே, பயிற்சி பெற முடியும் என்பதால் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.இதுவரை 5 முதல் 6 பேர் தான் அட்மிஷன் போட்டுள்ளனர். இந்தப் படிப்பில் சேர்வதற்கு இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது.

மதிப்புமிக்க Vocational course படியுங்கள்:காஞ்சிபுரத்தில் Logistics கோர்ஸ் மற்றும் ஆரணியில் Footware படிப்பு உள்ளது. இங்கு உள்ள மக்களுக்கு திறன் வளர்த்துக் கொள்ள ஆர்வமும் இருக்கும். இனி வரும் காலங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளில் தான் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும். இன்ஜினியரிங் படிப்பில் அதிகம் கணக்கு படிக்க வேண்டும் அதனால் பலர் திறன் இருந்தும் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். சமூகத்தில் Vocational course மதிப்பு குறைவானது என்ற பார்வை உள்ளது. அதனை மாற்ற வேண்டும். பயிற்சி மூலம் ஒன்றை கற்றுக் கொண்டால் அதை மறக்க மாட்டார்கள். அது பணிக்கு கூடுதலாக உதவும். இந்தப் பட்டிப்படிப்பினை கணிதம் பாடம் இல்லாமலும் படிக்கலாம்.

இப்படிப்புக்கான கட்டணம்:இந்தப் பாடப்பிரிவினை முடிப்பவர்கள் தனியாக தொழில் தொடங்க கூட முடியும். Textile course syllabus முடிக்கப்படாததால் இரண்டு பாடத்தை மட்டும் அறிமுகப்படுத்தி உள்ளோம். ஒரு செமஸ்டருக்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும். Logistics வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. நாட்டுக்கு Vocational course படித்தவர்கள் தான் தேவையாக உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகளை பிற உறுப்புக்கல்லூரியிலும் துவக்குவதற்கு வரும் காலத்தில் திட்டமிட்டுள்ளோம்.

இனி பொறியியல் படிப்புக்கு பதிலாக B.Voc மட்டுமே:மாணவர்கள் அதிக அளவில் தற்போது பொறியியல் படிப்புகள் படித்து வேலையில்லாமல் குறைந்த ஊதியத்திலும் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால், இதுபோல திறன் மேம்பாட்டு படிப்புகளில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு முறையான வேலையும் ஊதியமும் கிடைக்கிறது. அதனால், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பொறியியல் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு இதுபோல மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு கொண்ட திறன் மேம்பாட்டு படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சட்ட ஆலோசனை பெற்ற பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Last Updated :Oct 24, 2023, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details