தமிழ்நாடு

tamil nadu

'துணிவு' ரிலீஸ் தேதி எப்போது? குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!

By

Published : Jan 4, 2023, 1:11 PM IST

Updated : Jan 4, 2023, 3:15 PM IST

பிவிஆர் சினிமாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் துணிவு ஜன11ம் தேதி வெளியாக உள்ளதாக பதிவிட்டுள்ளது. மேலும் சில தினங்களில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்
அஜித்

சென்னை: எச்.வினோத் - அஜித் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

படத்தின் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. படத்தின் ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தின் அஜித்தின் லுக் மிகவும் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இப்படத்துடன் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. எனவே இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிடுகிறது.

ஆனால் தற்போது வரை இரண்டு படங்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் குழம்பியுள்ளனர். படத்துக்கான டிக்கெட் புக்கிங் கூட ஓபன் ஆகாமல் உள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் அதாவது ஜன.12ம் தேதி வெளியாகுமா? அல்லது துணிவு படம் ஒருநாள் முன்னதாக 11ம் தேதி வெளியாகுமா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

பிவீஆர் சினிமாஸ் ட்வீட்

இது ஒருபுறம் இருக்க பிரபல திரையரங்கு நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் துணிவு ஜன.11ம் தேதி வெளியாக உள்ளதாக பதிவிட்டுள்ளது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் இரண்டு படங்களின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பதி பிரதர்ஸ் உடன் மீண்டும் இணையும் கமல் ஹாசன்

Last Updated : Jan 4, 2023, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details