தமிழ்நாடு

tamil nadu

எழும்பூர் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு

By

Published : Mar 11, 2021, 9:05 PM IST

சென்னை: எழும்பூர் (தனி) தொகுதியை தமிழக மக்கள் மன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழும்பூர் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு
எழும்பூர் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியின் சார்பில் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது.

இந்நிலையில், அதிமுக வெளியிட்ட 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் எழும்பூர் (தனி) தொகுதி ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வேட்பாளரை மாற்றக் கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை அதிமுக அலுவலகத்திற்குள் செல்லாதவாறு காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க: வேட்பாளர்கள் தேர்வுக்கு டீம் ரெடி - கமல் ஹாசன் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details