தமிழ்நாடு

tamil nadu

அதிமுக பொதுக்குழு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஓபிஎஸ் தரப்பு

By

Published : Jun 28, 2022, 2:06 PM IST

அண்மையில் நடந்த முடிந்த அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளரும் , பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

admk general secretary meeting
அதிமுக பொதுக்குழு

சென்னை:பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக சண்முகம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்குழுவில் தீர்மானங்களை நிராகரித்தது; நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமனம் செய்தது, ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது, ஜூலை 11இல் அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தது இவை அனைத்தும் உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என மனுவில் குற்றச்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details