தமிழ்நாடு

tamil nadu

இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட மறுக்கும் ஈபிஎஸ்.. பின்னணி என்ன ?

By

Published : Jun 30, 2022, 7:00 AM IST

உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட ஏதுவாக படிவங்களை அனுப்ப ஓபிஎஸ் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், படிவத்தில் கையெழுத்து போட ஈபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...
இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...

சென்னை:தமிழ்நாட்டில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, காலியாக உள்ள 510 இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் ஜூன் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதிமுக கட்சி சின்னத்தில் 34 கவுன்சிலர்கள் போட்டியிடுகின்றனர். கட்சியின் சின்னம் பெறுவதற்கு இந்த 34 வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி படிவம் 1, படிவம் 2-ல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துப் போட வேண்டும்.

ஓபிஎஸ் கடிதம் வாங்க ஈபிஎஸ் மறுப்பு..!

இதனிடையே, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே நடைபெறும் மோதல் நிலவிவரும் சூழலில் ஓபிஎஸ் தரப்பினர் ஈபிஎஸ்க்கு படிவத்தில் கையெழுத்து போட வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தை அதிமுக தலைமை மேலாளர் மகாலிங்கத்திடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

ஆனால் படிவத்தில் ஈபிஎஸ் கையெழுத்து போட மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று (ஜூன்.30) மாலை 3 மணிக்குள் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திட்டு அனுப்பினால் இரட்டை இலை கிடைத்து விடும் என ஓபிஎஸ் தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கூறியிருந்த நிலையில், ஈபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளளதாக கூறப்படுகிறது.

ஈபிஎஸ் தரப்பில் உள்ளாட்சி வேட்பாளர்கள் படிவத்தில் கையெழுத்தட்டால் ஒருங்கிணைப்பாளர் பதவியை நாம் ஏற்றுக்கொண்டது என பொருள் ஆகிவிடும் என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஈபிஎஸ் மறுப்பு தெரிவித்ததால் அதிமுக வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்னுடைய ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான்: எம்ஜிஆர் பேரன் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details