தமிழ்நாடு

tamil nadu

அதிமுகவுக்கு தோல்வி பயம்: வாக்களித்த பின் மு.க. ஸ்டாலின்

By

Published : Apr 6, 2021, 9:17 AM IST

Updated : Apr 6, 2021, 10:34 AM IST

சென்னை: தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி வலியுறுத்தியது ஆனால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு செலுத்திய பின் கூறினார்.

dfas
das

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 234 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவுக்கு எதிரான அலை தமிழ்நாட்டில் உள்ளது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றிபெறும்.

வாக்கு செலுத்தும் மு.க. ஸ்டாலின்

தேர்தல் ஆணையம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதிமுகவினர் தேர்தல் பயம் காரணமாக திமுகவினர் மீது புகார் அளித்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் நடுநிலைமையாக நேர்மையாக செயல்பட்டுள்ளது” என்றார்.

Last Updated : Apr 6, 2021, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details