தமிழ்நாடு

tamil nadu

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்!

By

Published : Jan 12, 2023, 10:24 AM IST

சட்டப்பேரவையில் சொத்துவரி உயர்த்தப்பட்டது குறித்த விவாதத்தில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சொத்துவரி உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அனல் பறந்த முக்கோண விவாதம்
சொத்துவரி உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அனல் பறந்த முக்கோண விவாதம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அதில் நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தனது உரையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அதில், திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒன்றும் வந்த பின்பு ஒரு நிலைப்பாட்டிலும் செயல்படுகிறது என்றார். அதாவது கிமு - கிபி என்று சொல்வதைப் போல ’ஆமு’ என கூறினார்.

அப்போது குறிக்கிட்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "இந்தியாவிலேயே மிக குறைவான சொத்துவரி உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். 2400 சதுர அடிக்கு 2400 ரூபாய் தான். மஹாராஷ்டிராவில் மிக அதிகமாக 12,000 ஆக இருக்கிறது. என்றார்.

அப்போது இடையில் எழுந்து பேசிய அதிமுக கொறடா வேலுமணி, மத்திய அரசு சொத்துவரியை உயர்த்த உத்தரவிட்டும், அதிமுக ஆட்சியில் சொத்துவரி உயர்த்தக்கூடாது என எடப்பாடி உத்தரவிட்டார் என்றார். மேலும் கரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போது வரியை உயர்த்தலாமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிளித்த நேரு, "மத்திய அரசை வலியுறுத்தி நிதியை பெற்றீர்கள். தேர்தல் நெருங்கிய காலம் என்பதால் நீங்கள் வரியை உயர்த்தாமல் சென்றீர்கள். நீங்கள் விட்ட கடனை நாங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறோம்", என்றார்.

அப்போது இடையில் பேசிய ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "தமிழ்நாட்டில் 388 ஊராட்சி ஒன்றியங்களில் எந்தப் பணமும் செலுத்தாமல் டெண்டர் விட்டீர்கள்", என குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த வேலுமணி, "நிதி ஆதாரத்தை பெற்று தான் டெண்டர் விடப்பட்டது. 1998 - 2008 திமுக ஆட்சியில் தான் வரி உயர்த்தப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படவில்லை", என்றார்.

இதற்கு பதிலளித்த பெரியசாமி, "நிதி ஒதுக்காததுக்கான ஆதாரத்தை தருகிறேன். 2 வருடம் ஊராட்சி பிரதிகளால் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை", என குற்றம் சாட்டினார். இப்படியாக முக்கோண விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் ஆளுநரின் பொறுப்பு என்ன? - விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு!

ABOUT THE AUTHOR

...view details