தமிழ்நாடு

tamil nadu

தசரா பண்டிகை- குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள்

By

Published : Sep 20, 2022, 4:16 PM IST

Updated : Sep 20, 2022, 4:46 PM IST

தசரா பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

தசரா பண்டிகை- குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள்
தசரா பண்டிகை- குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள்

சென்னை:குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், வரும் (அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்.4ஆம் தேதி வரை), சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை முடிந்து திரும்பிட ஏதுவாக, (அக்டோபர் 6ஆம் தேதி முதல் அக்.10ஆம் தேதி) வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

Last Updated : Sep 20, 2022, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details