தமிழ்நாடு

tamil nadu

தளபதி 68 படப்பிடிப்புக்காக தாய்லாந்திற்கு சென்ற நடிகர் விஜய்! வீடியோ வைரல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 11:31 AM IST

Updated : Nov 3, 2023, 1:33 PM IST

Thalapathy 68 Update : தளபதி 68 படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் விஜய் தாய்லாந்து, பாங்காக்கிற்கு சென்று உள்ளார்.

actor-vijay-left-for-thailand-for-the-shooting-of-thalapati-68
தளபதி 68 படப்பிடிப்புக்காக தாய்லாந்திற்கு சென்ற விஜய்! வீடியோ வைரல்

தளபதி 68 படப்பிடிப்புக்காக தாய்லாந்திற்கு சென்ற நடிகர் விஜய்! வீடியோ வைரல்!

சென்னை:தளபதி 68 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் இன்று (நவ. 3) தாய்லாந்திற்கு புறப்பட்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டு அதன் வெற்றி விழாவும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்குகிறார். "தளபதி 68" என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை AGS எண்டர்டெய்ன்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 20 வருடத்திற்குப் பிறகு விஜய் - யுவன் கூட்டணி இணைய உள்ளது.

முன்னதாக, புதிய கீதை படத்திற்கு யுவன் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி மற்றும் மோகன், கேரள நடிகர் ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் என பலரும் நடிக்க உள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்களான சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் என பலரும் "தளபதி 68" படத்தில் இணைகின்றனர் என படக்குழு தரப்பில் வெளியான பூஜை வீடியோவில் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முடிவடைந்தது. பதினைந்து நாட்கள் இடைவேளைக்கு பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் படக் குழுவினர் தாய்லாந்து, பேங்காக்கிற்கு சென்று உள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய் இரண்டாம் கட்ட படப்பிட்டிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று (நவ. 3) பேங்காக் புறப்பட்டார்.

அங்கு சில தினங்கள் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை விரைவில் முடித்து விட்டு அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விஜய் ஏற்கனவே பிகில் என்ற படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இறைவன் எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைப்பார்: இசையமைப்பாளர் டி.இமான்!

Last Updated :Nov 3, 2023, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details