தமிழ்நாடு

tamil nadu

ஆதித் தமிழர் - நாம் தமிழர் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு - அடிதடி போராட்டம்!

By

Published : Mar 7, 2023, 12:51 PM IST

Updated : Mar 7, 2023, 1:12 PM IST

சென்னையில் ஆதித் தமிழர் கட்சியினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே நடந்த மோதல் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

Etv Bharat
Etv Bharat

ஆதித் தமிழர் - நாம் தமிழர் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு

சென்னை: நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன் ஆதித் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த இடமே சிறிது நேரத்திற்கு களேபரமாக காட்சி அளித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தின் போது அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து தூய்மைப் பணிக்காக அழைத்து வரப்பட்டவர்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக வீடியோ வெளியானது.

மேலும் "அருந்ததியர்கள் தெலுங்கு வந்தேறிகள் என்று சீமான் பேசியதாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சீமானின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர்.

அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக ஆதித் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சீமான் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதித் தமிழர் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித் தமிழர் கட்சி அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று (மார்ச்.07) 50க்கும் மேற்பட்ட ஆதி தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கைகளில் கட்சி கொடிகளை ஏந்தி கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலமாக வந்தவர்களை ஆற்காடு சாலையில் போரூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரின் தடுப்பையும் மீறி பத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி கல் வீசி தாக்கி கொண்ட நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு கையில் சிக்கிய ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகளை சரமாரியாக அடித்து உதைத்தனர். அங்கிருந்து ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள் தலைதெறிக்க ஓடினார். இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தடுப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் முயன்றனர். அப்போது போலீசாருக்கும், ஆதித் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன், சாலையில் கட்டிப்புரண்டு ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள் சண்டையிட்டனர்.

தொடர்ந்து தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆதித் தமிழர் கட்சியினரை கைது செய்து அரசு மாநகரப் பேருந்தில் ஏற்றிச் சென்றனர். இதானல் அப்பகுதி சிறிது நேரம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:போலீசார் மீது துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் உயிர் தப்பிய போலீஸ்.. கோவையில் திக்.. திக்.. சம்பவம்..!

Last Updated :Mar 7, 2023, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details