தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் கதையின் நாயகனாக கருணாஸ்?

By

Published : Jul 16, 2021, 12:14 PM IST

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'ஆதார்' திரைப்படத்தின் பூஜை இன்று (ஜூலை 16) நடைபெற்றது.

'ஆதார்' திரப்படத்தின் பூஜை
'ஆதார்' திரப்படத்தின் பூஜை

சென்னை:'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஆதார்'.

இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், வத்திக்குச்சி படத்தின் கதாநாயகன் திலீபன், 'பாகுபலி' பட புகழ் பிரபாகர், நடிகை மணிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசையமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத்தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்க, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஏ.பி. ரவி பணியாற்றுகிறார்.

ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அழகம்மை மகன் சசிக்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 16) பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணனுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வனிதா

ABOUT THE AUTHOR

...view details