தமிழ்நாடு

tamil nadu

Chennai Local Train: மின்சார ரயிலில் மயங்கி விழுந்து பெண் பலி.. மெரினா பீச் பானி பூரி, சுண்டல் காரணமா?

By

Published : Apr 3, 2023, 7:30 AM IST

சென்னை மின்சார ரயிலில் பயணிக்கும் போது இளம்பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai
மின்சார ரயிலில் சென்ற இளம்பெண் மரணம்

சென்னை:மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவரது நண்பர்களுடன் பயணம் செய்தபோது, திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை அவரது நண்பர்களும், சக பயணிகளும் இணைந்து அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த போலிசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கடலூரைச் சேர்ந்த குரு சந்திரன் என்பவரது மகள் மோனிஷா என்பது தெரியவந்துள்ளது.

மேலும், மோனிஷா தனது நண்பர்களுடன் சென்னை மெரினா கடற்கரை சென்று, அங்கு பானி பூரி, சுண்டல் மற்றும் மக்காச்சோளம் ஆகியவை சாப்பிட்டு விட்டு மீண்டும் திருவான்மியூர் செல்ல மின்சார ரயிலில் பயணம் செய்தபோது மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரை பிடித்த சக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, பல துண்டுகளாக வெட்டிய இளைஞர் கைது

மோனிஷாவுடன் இருந்த் தோழி ஒருவர் செவிலியர் என்பதால் முதற்கட்ட மருத்துவ உதவி செய்து பின்னரே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போதிலும் இளம்பெண் பாதி வழிலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பறக்கும் ரயிலில் நடந்த விவகாரம் காரணமாக திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோனிஷாவின் உறவினர் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் மோனிஷா சாப்பிட்ட பானி பூரி, சுண்டல், மக்காச்சோளம் ஆகியவற்றை உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததா? இல்லை வேறு எதேனும் காரணமா? என்ற கோணத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆனாலும், உடற்கூராய்வு முடிவுக்கு பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி அவதூறு வழக்கு - தீர்ப்பை எதிர்த்து ராகுல் நாளை மேல்முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details