தமிழ்நாடு

tamil nadu

சுயதொழில் செய்யும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும் - ஐஸ்வர்யா தனுஷ்

By

Published : Jul 3, 2019, 9:18 AM IST

Updated : Jul 3, 2019, 10:45 AM IST

சென்னை: சுயதொழில் செய்யும் பெண்கள் சமூகத்தில் தனித்துவம் மிக்கவர்களாக திகழ்கிறார்கள் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ்

வீட்டில் இருந்து சுயதொழில் செய்யும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சுய சக்தி விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா தனுஷ் கலந்துக்கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர்; "சுயதொழில் செய்யும் பெண்களுக்கு சமூகத்தில் சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் அதிக அளவில் உள்ளது. ஒரு பெண் தன் சொந்தக்காலில் நின்று சுயதொழில் செய்யும் போது, மற்ற பெண்களும் அதனை பின்பற்றுவார்கள். ஒரு பெண்ணின் தனிப்பட்ட முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாக வளர்ச்சி பெறும் என்று கூறிய அவர், சுய சக்தி விருதுகள் பல்வேறு பெண்களை இந்த சமூகத்துக்கு அடையாளம் காட்டும்" என்றார்.

ஒரு பெண்ணின் தனிப்பட்ட முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாக வளர்ச்சி பெறும் - ஐஸ்வர்யா தனுஷ்
Last Updated : Jul 3, 2019, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details