தமிழ்நாடு

tamil nadu

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம்... ரூ.5,000 ஊதியம்...

By

Published : Oct 14, 2022, 7:56 AM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தன. திமுக ஆட்சி அமைந்த உடன் அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வந்த எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நடப்பு கல்வி ஆண்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம் என பள்ளி கல்வித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது . இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியது.

எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு கற்பித்த தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால் அந்த மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை உருவாகியது. இந்த நிலையில் 2,831 அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் தற்காலிகமாக நியமிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு மையத்திற்கு ஒரு தற்காலிக ஆசிரியர் நியமிக்க வேண்டும்.

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை கையாள இல்லம் தேடி கல்வி சட்டத்தில் பணிபுரியும் தொடக்க கல்வி பட்டைய பயிற்சி தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மை குழுவை தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்க வேண்டும். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத பொழுது தொடக்க கல்வி பட்டைய படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்ய வேண்டும்.

இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது எனவும் பிழைப்பூதியமாக 5,000 பள்ளி மேலாண்மை குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம். தற்காலிக ஆசிரியர்கள் காலை 9:30 மணி முதல் 12 30 மணி வரை பணி செய்ய வேண்டும். ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஒரு கல்வியாண்டில் 11 மாதங்கள் மட்டுமே வேலை நாட்கள். பள்ளியின் கடைசி வேலை நாள் என்று பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு பணப்பலனை அளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details