தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு!

By

Published : Jan 26, 2023, 10:30 AM IST

சென்னை விமான நிலையத்தில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பயணி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

passenger suddenly fainted at Chennai airport
சென்னை விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு

சென்னை: தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் துளசி சுகுணா பிரசாத் (65). இவருடைய மனைவி கலவாலா கல்யாணி (59). இவர்களின் மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இதையடுத்து மகனைப் பார்க்க அமெரிக்கா செல்வதற்கு, இவர்கள் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது அதன் நேர்காணலுக்காகக் கணவன், மனைவி இருவரும் கடந்த 21ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்திலிருந்து, விமானத்தில் சென்னை வந்தனர்.

சென்னையில் விசாவுக்கான பணிகளை முடித்துவிட்டு நேற்று விமானத்தில் ஹைதராபாத் செல்வதற்காகச் சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தனர். பின்னர் சென்னை உள்நாட்டு விமான நிலைய பயணிகள் புறப்பாடு கேட் எண் 14 அருகே, போர்டிங் பாஸ் சரி பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது துளசி சுகுணா பிரசாத் திடீரென மயங்கி விழுந்தார். உடனே மனைவி பதற்றத்தில் துடித்தார். இதை அடுத்து துளசி சுகுணா பிரசாத்தைச் சென்னை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது துளசி சுகுணா பிரசாத் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்ப் பாதிப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Republic day: புதுச்சேரியில் வண்ண விளக்குகளால் மிளிரும் அரசு கட்டடங்கள்!

ABOUT THE AUTHOR

...view details