தமிழ்நாடு

tamil nadu

வடபழனியில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் - 7 பேர் கைது!

By

Published : Nov 26, 2019, 8:11 PM IST

சென்னை: அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

7 persons arrested after fight between government bus drivers
7 persons arrested after fight between government bus drivers

சென்னை வடபழனி பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராக இருப்பவர்கள் பூங்காவனம் மற்றும் முருகேசன். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகேசன், வடபழனி பணிமனையில் பணியிலிருந்த ஓட்டுநர் பூங்காவனத்தை முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சென்று தாக்கியுள்ளார்.

பின்னர் இரு பிரிவுகளாக பிரிந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார், 4 அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 7 பேர் மீது ஆயுதங்களால் தாக்கியது, தவறான வார்த்தைகளை பொது இடங்களில் பயன்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினர். அரசுப் பேருந்து பணிமனையில் அரசு ஓட்டுநர்களுக்கு இடையே ஒருவரை ஒருவர் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details