தமிழ்நாடு

tamil nadu

ஓரினச்சேர்க்கையை வீடியோ எடுத்து மிரட்டல்.. திருச்சியில் 6 பேர் கொண்ட கும்பல் கைது!

By

Published : Apr 20, 2023, 2:10 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக கூறி பணம் பறித்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

திருச்சி:மணப்பாறை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஐடி ஊழியர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பயணியிடம் ஒரு சில செயல்பாடுகள் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

இதையடுத்து இருவரும் இணைந்து மணப்பாரை பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி பெரியகுளம் உள்ள பகுதிக்கு சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சக பயணியான அறிவழகன் என்பவர் தனது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு தான் ஆபத்தில் இருப்பதாகவும் உடனடியாக வரும்படியும் அழைத்துள்ளார்.

பின்னர் அப்பகுதிக்கு வந்த அறிவழகனின் நண்பர்கள் ஒவ்வொருவராக அந்த ஐடி ஊழியரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதை ஒருவர் மாற்றி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பாதிப்புக்கு ஆளான இளைஞரிடம் இருந்து ரூபாய் 75 ஆயிரம் வரை பறித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் நேற்று மணப்பாறை காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மணப்பாறை காவல்துறையினர் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு எண் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் குற்றவாளிகளை அடையாளம் கண்ட போலீசார் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்த அறிவழகன் மற்றும் அவரது நண்பர்களான முகமது ரியாஸ், அருண்குமார், லியோ பிளாய்டு, மயில் என்ற செந்தில்குமார், யுவராஜ் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் முகமது ரியாஸ் மற்றும் மயில் என்ற செந்தில்குமார் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்.. கோவையில் இளம்பெண் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details