தமிழ்நாடு

tamil nadu

உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 1.6 கிலோ தங்கம் கடத்தல் - நால்வர் கைது

By

Published : Dec 18, 2019, 7:48 AM IST

சென்னை: மலேசியா, சார்ஜாவிலிருந்து சென்னைக்குக் கடத்தி வந்த ரூ. 58 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gold seized
தங்க கட்டிகள்

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் இருந்தனர். அப்போது மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஷேகு ஷரபாத் (32), சுங்கத்துறை அலுவலர்களின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார்.

பின்னர் அவரது உடைமைகளை சோதனை செய்ததில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து ரூ. 27 லட்சம் மதிப்புள்ள 689 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.

அதேபோல், சார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம், மலபுரத்தைச் சேர்ந்த முகமது இஸ்ரத் (27), முகமது முஸ்தபா (28), முகமது யூனுஸ் (22) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அலுவலர்கள் நிறுத்தி விசாரித்தனர். இவர்களும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ரூ. 31 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 810 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

விமான நிலையத்தில் அடுத்தடுத்து சோதனையில் சிக்கிய தங்கக் கட்டிகள்

எனவே, விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நான்கு பேரிடமிருந்து ரூ. 58 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 599 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலையில் வழிந்தோடும் பாதாளச்சாக்கடை கழிவுநீர் - போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

Intro:மலேசியா, சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த கடத்தி வந்த ரூ. 58 லட்சம் மதிப்புள்ள கிலோ தங்கம் பறிமுதல் சென்னை வாலிபர் கைதுBody:*மலேசியா, சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த கடத்தி வந்த ரூ. 58 லட்சம் மதிப்புள்ள கிலோ தங்கம் பறிமுதல் சென்னை வாலிபர் கைது*

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை பகுதியை சேர்ந்த ஷேகு ஷரபாத்(32) என்பவர் வந்தார். இவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்க தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமும் இருந்து
ரூ. 27 லட்சம் மதிப்புள்ள 689 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதுப்போல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரளா மலபுரத்தை சேர்ந்த முகமது இஸ்ரத் (27), முகமது முஸ்தபா (28), முகமது யூனுஸ் (22) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இவரகளது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்து ரூ. 31 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்புள்ள 810 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

4 பேரிடமும் இருந்து ரூ. 58 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 599 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையை சேர்ந்த ஷேகு ஷரபாத்தை கைது செய்தனர். கேரள வாலிபர்களிடம் விசாரித்து வருகின்றனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details