தமிழ்நாடு

tamil nadu

"உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை 5001 வேட்பு மனுக்கள் தாக்கல்" - மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

By

Published : Dec 10, 2019, 10:17 PM IST

சென்னை: இரண்டு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தற்போது வரை 5001 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

election commission
மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் விவரத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதில், 'கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4 ஆயிரத்து 290 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு 621ம் , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு 85ம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 5ம் என மொத்தம் 5001 வேட்பு மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இதையும் படிங்க: 'கிறிஸ்துவும் சரி கிருஷ்ணனும் சரி இங்குதான் பிறக்கிறார்கள்'

Intro:Body:உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை 5001 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக நேற்று முதல் வேட்புமனுத்தாக்கல் நடந்துவருகிறது.

ஊரக உள்ளாட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் விவரம்:

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4290 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சித் தலைவர்கள் 621, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 85, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 5 என மொத்தம் 5001 வேட்பு மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Conclusion:

ABOUT THE AUTHOR

...view details