தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் காற்றின் தரத்தை கண்காணிக்க மேலும் 5 கண்காணிப்பு நிலையம்

By

Published : Jul 30, 2022, 7:37 PM IST

சென்னையில் காற்றின் தரத்தினை கண்காணித்திட மேலும் 5 இடங்களில் நிகழ்வு நேர கண்காணிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் காற்றின் தரத்தினை கண்காணித்திட மேலும் 5 கண்காணிப்பு நிலையம் - மாநகராட்சி
சென்னையில் காற்றின் தரத்தினை கண்காணித்திட மேலும் 5 கண்காணிப்பு நிலையம் - மாநகராட்சி

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று (ஜூலை 30) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், சென்னையில் காற்றின் தரத்தினை கண்காணித்திட மேலும் 5 இடங்களில் நிகழ்வு நேர கண்காணிப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த வகையில் மத்திய மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம் மூலம், ஆலந்தூர், வேளச்சேரி, பெருங்குடி, அரும்பாக்கம், ராயபுரம், கொடுங்கையூர் மற்றும் மணலி ஆகிய இடங்களில் நிகழ்வு நேர கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டு காற்றின் தரம் கண்காணிக்கப்படும்.

மொத்தம் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து அமைக்கப்படவுள்ளது. நான்கு நிலையத்தினை மாசுக்கப்பட்டு வாரியம், ஒரு நிலையத்தை மாநகராட்சியும் அமைக்கவுள்ளது.

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் மூலம் சென்னை நகரத்தில் காற்றின் தரத்தினை மேம்படுத்திட மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி, சென்னை மாநகராட்சி பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை மேம்படுத்தியதன் மூலம் சென்னையில் கடந்தாண்டு கோடை காலத்திலிருந்த அளவை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைந்துள்ளது.

இதையும் படிங்க:பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமன ஒப்புதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிநடப்பு

ABOUT THE AUTHOR

...view details