தமிழ்நாடு

tamil nadu

விவசாயநிலத்தில் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்!!

By

Published : May 19, 2021, 11:03 AM IST

திருவண்ணாமலை: செய்யாறு அருகே விவசாய நிலத்தில் புதைத்து வைத்திருந்த 15 லட்சம் மதிப்பு எரிசாராய கேன்களை பறிமுதல் செய்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்!!
புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்!!

திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த சுருட்டல் கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி மணி(60). இவர் தனது கிராமத்தில் பாக்கெட்டுகள் மற்றும் 35 லிட்டர் கேனில் வைத்து எரிசாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதன்படி தூசி காவல்துறையினர், மணியின் வீடு மற்றும் விவசாய நிலத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, நிலத்தில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 56 கேன்களில் எரிசாராயத்தை நிரப்பி மண்ணில் புதைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மண்ணை தோண்டி எரிசாராய கேன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர், எரிசாராயத்தை செய்யாறு மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, மணியின் மகன் மோகன்ராஜ் (33) , அவனது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த குணசீலன்(20), கூழமந்தல் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (31) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் , தலை மறைவாக உள்ள சுருட்டல் மணியை தேடி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் கேன்கள் விற்பனை அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details