தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 300 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

By

Published : Oct 7, 2021, 1:32 PM IST

வியாசர்பாடி பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை ஆந்திராவில் இருந்து வாங்கி விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சென்னையில் 300 கிலோ குட்கா பறிமுதல்
சென்னையில் 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் தொடர்ந்து விற்கப்படுவதாக எம்கேபி நகர் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதில் சிறிய கடைகளுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து குட்கா பொருள்களை விநியோகித்து வருவதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

இதனையடுத்து வியாசர்பாடி தேபர் நகர் 9ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு அதிரடியாக சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தீவிர சோதனையில் அந்த வீட்டில் இருந்த 300 கிலோ குட்கா பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து குட்கா பொருள்களை விற்பனை செய்து வந்த மாரிமுத்து (45) என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அவர் ஆந்திராவில் இருந்து குட்கா பொருள்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து அதனை சிறு சிறு பெட்டலங்களாக பிரித்து வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது தெரியவந்தது.

மேலும் இவர் மீது ஏற்கனவே கொடுங்கையூர் காவல்நிலையத்தில் குட்கா வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தன , இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:குடிபோதையில் ரகளை: தட்டிக்கேட்ட காவலருக்கு கத்திகுத்து

ABOUT THE AUTHOR

...view details