தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் அதிகரிக்கும் கரோனா; தமிழ்நாட்டில் மேலும் 30 நபர்களுக்கு பாதிப்பு

By

Published : Apr 6, 2022, 10:44 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 30 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 30 நபர்களுக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் மேலும் 30 நபர்களுக்கு கரோனா பாதிப்பு

சென்னை:தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வந்த கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இன்று(ஏப்.6) மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 22 ஆயிரத்து 70 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 30 நபர்களுக்கு கரோனா:இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த மேலும் 30 நபர்களுக்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 45 லட்சத்து 59 ஆயிரத்து 38 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்சிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 52 ஆயிரத்து 985 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 258 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 702 என உயர்ந்துள்ளது.

இறப்பவர்களின் எண்ணிக்கை:மேலும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் இறப்பவர்களின் எண்ணிக்கை இல்லாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 12 நபர்களுக்கும் திருவள்ளூரில் நான்கு நபர்களுக்கும் செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும் திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், சிவகங்கை, திருப்பத்தூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்கள் என 30 நபர்களுக்கு வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 110 நபர்களும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 நபர்களும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18 நோயாளிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 நோயாளிகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் 15 நோயாளிகளும் என பெரும்பாலான மாவட்டங்களில் நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக உருவாக்க பொது சுகாதாரத்துறை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்து இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது

இதையும் படிங்க: 'திருமண வாக்குறுதியின் பேரில் பாலுறவு'- கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details