தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 200 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By

Published : May 10, 2022, 4:49 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டலின் அறிவித்த 708 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகளில், சென்னையில் வட்டத்திற்கு ஒரு மருத்துவமனை என 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 200 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் 200 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:இன்றைய (மே10) சட்டப்பேரவை கூட்டத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய திருவிக நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, "திருவிக நகர் சட்டப்பேரவை தொகுதி மண்டலம் 6ஆவது வார்டு 73இல் அமைந்துள்ள புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது.

அங்கு 60 படுக்கைகள் மட்டுமே உள்ளன. அதனை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும்” என்றார். மேலும், “அங்கு சிறப்பு மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஆகியோர் பணிக்கு தேவைப்படுகிறார்கள்.

எனவே அவற்றை நிறைவேற்றித் தர ஆவன செய்ய வேண்டும்” எனக் கோரிக்கையை முன்வைத்துப் பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "நகர்ப்புறங்களில் மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்காக தான் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின் கீழ் 708 நகர்ப்புற மருத்துவமனைகள் ஏற்படுத்துவதற்கு அறிவிப்பினை வெளியிட்டார்.

அதில், சென்னையை பொருத்தவரை 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு வட்டத்திற்கு ஒரு மருத்துவமனை எனப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உறுப்பினரின் தொகுதியில் 7 வட்டங்கள் உள்ளன என்றால் அந்தப் பகுதியில் ஏழு மருத்துவமனைகள் வரவுள்ளன.

எனவே பெரிய மருத்துவமனைகள் நோக்கி மக்கள் வருவதை குறைப்பதற்கான நடவடிக்கையாக நகர நலவாழ்வு மையங்கள் 708 முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். எனவே புதிதாக 7 மருத்துவமனைகள் வரக்கூடிய சூழலில் ஏற்கனவே இருக்கும் 60 படுக்கைகளே போதும்", என்றார்.

இதையும் படிங்க:19 அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் - மா. சுப்பிரமணியன்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details