தமிழ்நாடு

tamil nadu

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்?

By

Published : Apr 19, 2021, 3:23 PM IST

சென்னை : 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான கால அட்டவணை, தேர்வு நடைபெறும் தேதிக்கு 15 நாள்களுக்கு முன்னர் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.

12th-exam-date-update
12th-exam-date-update

அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகத் தற்போது நடைபெற்றுவரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.

எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மேலும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மே 5ஆம் தேதிமுதல் மே 21, 31 ஆகிய நாள்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் நாள்கள் குறித்த விவரம், தேர்வுகள் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு முன்னர் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும்.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்களது மாவட்டங்களில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட விவரத்தினைத் தெரிவிக்க வேண்டும்.

மேலும் தலைமையாசிரியர்கள் மூலம் பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் விவரத்தினைத் தெரிவிக்க வேண்டும்.

தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்தப்பட வேண்டும்.

செய்முறைத் தேர்வு, அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்ககத்தால் அறிவுறுத்தப்பட்ட நாள்களில் இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இரவு ஊரடங்கு எதிரொலி: பகலில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details