தமிழ்நாடு

tamil nadu

100 விழுக்காடு வாக்குப்பதிவு: நகராட்சி சார்பில் ராட்சத பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு

By

Published : Mar 18, 2021, 1:57 PM IST

திருவள்ளூர்: திவேற்காட்டில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி நகராட்சி சார்பில் ராட்சத பலூன்கள் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நகராட்சி சார்பில் ராட்சத பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு
நகராட்சி சார்பில் ராட்சத பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அலுவலர்கள் பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திருவேற்காடு நகராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இதற்காக, நகராட்சி அலுவலக மொட்டை மாடியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு, ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது ஆகியவற்றை வலியுறுத்தியும் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ராட்சத பலூனை நகராட்சி ஆணையர் வசந்தி பறக்க விட்டார். தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், தேவி கருமாரியம்மன் கோயில், முக்கிய வீதிகளில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், மேலாளர் முபாரக் பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு

ABOUT THE AUTHOR

...view details