தமிழ்நாடு

tamil nadu

பாஜக கொடி கம்பம் அகற்றம் விவகாரம்: "100 நாட்களில் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும்" - அண்ணாமலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 4:54 PM IST

BJP flagpoles removal issue in Tamilnadu: சென்னை பனையூரில் பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 100 பாஜக கொடி கம்பங்கள் நடப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் வெளியே 100 அடி உயரம் கொண்ட பாஜக கொடி கம்பம் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கொடி கம்பம் முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கொடிக் கம்பம் என்றும் இந்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என்றும் பனையூர் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை வீட்டு முன்பு குவிந்தனர்.

அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினருடன் பனையூர் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கொடிக் கம்பத்தை கிரேன், ஜேசிபி இயந்திரங்களை கொண்டு காவல் துறையினர் அகற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஜகவினரும் அண்ணாமலை வீட்டின் முன் குவிந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த கொடிக் கம்பத்தை அகற்றியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜகவினர் மீது வழக்கும் தொடரப்படு உள்ளது. இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X வலைதளபக்கத்தில் தனது பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், "குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாக சுற்றித்திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளை கைது செய்யப் போவதுபோல, நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழ்நாடு பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.

பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும், ஊழல் திமுக அரசுக்கு மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:“கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க நான் ஒன்றும் அண்ணாமலை இல்லை” - மன்சூர் அலிகான்

ABOUT THE AUTHOR

...view details