தமிழ்நாடு

tamil nadu

புழல் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறப்பு

By

Published : Nov 3, 2022, 8:59 AM IST

கனமழையின் காரணமாக புழல் ஏரியில் இருந்து 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

புழல் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறப்பு
புழல் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், ஏற்கனவே கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக நீர் நிரம்பி வந்தது. இந்த நிலையில் அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

நேற்றைய (நவ 2) நிலவரப்படி, புழல் ஏரியில் 2,717 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால் 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 18.54 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 539 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தற்போது புழல் ஏரி 82.33% நீர் இருப்பை நெருங்கியதால் ஏரியின் பாதுகாப்பு கருதி, முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை நீர்வளத்துறை அலுவலர்கள் பூஜை செய்து ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். மேலும் புழல் ஏரியின் உபரிநீர் திறக்கும் இரண்டு மதகுகளில் ஒரு மதகின் வழியாக வெளியேற்றப்பட்டுள்ள உபரி நீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது.

புழல் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறப்பு

நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தொடர்மழை காரணமாக ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரிநீரி திறப்பும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புழல் ஏரியில் இருந்து நவம்பர் மாதத்தில் உபரிநீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தொடர் மழை: கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details