தமிழ்நாடு

tamil nadu

நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 10 சவரன் நகை பறிப்பு

By

Published : Oct 20, 2021, 8:17 PM IST

Updated : Oct 20, 2021, 9:50 PM IST

கேகே நகரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 10 சவரன் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகை பறிப்பு
நகை பறிப்பு

சென்னை: கேகே நகர் 16 வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி(65). இவர் இன்று (அக்.20) அதிகாலை தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத இருவர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளை பறித்துத் தப்பி சென்றனர். இதில் மூதாட்டி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கே.கே நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதேபோல் சென்னை பெரம்பூர் சீனிவாசன் தெருவை சேர்ந்த சங்கரேஸ்வரி(35) நேற்றிரவு பழனி ஆண்டவர் கோயில் தெருவில் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி செயினை பறித்துதப்பி சென்றனர். இதுகுறித்து சங்கரேஸ்வரி அளித்த புகாரின் பேரில், செம்பியம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பெண் காவலரிடம் 9 சவரன் தங்க செயின் பறிப்பு!

Last Updated : Oct 20, 2021, 9:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details