தமிழ்நாடு

tamil nadu

அடகுக் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: அதிரவைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Jan 21, 2022, 1:39 PM IST

செங்கல்பட்டு அடகுக் கடைக்காரரை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

செங்கல்பட்டு:மாமண்டூரில் அடகுக் கடை நடத்திவருபவர் தர்மாராம். அதே மாமண்டூரிலுள்ள வடபாதி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இந்நிலையில் நேற்றிரவு (ஜனவரி 20) நகை அடகு வைப்பது தொடர்பாக சிலம்பரசனுக்கும் கடைக்காரர் தர்மாராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த சிலம்பரசன், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து, தர்மாராமை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த தர்மாராம், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிசிடிவி காட்சி

சிலம்பரசன் தர்மாராமை வெட்டும் காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய சிலம்பரசனைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:லாரி கிளீனரின் அந்நியன் அவதாரம் - அதிர்ச்சியடைந்த போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details