தமிழ்நாடு

tamil nadu

பெருங்களத்தூர் அருகே திருமணமான ஒரே மாதத்தில் பெண் தூக்கிட்டு உயிரிழப்பு!

By

Published : Jan 11, 2021, 4:50 PM IST

பெருங்களத்தூர் அருகே திருமணமான ஒரே வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணைக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

பெண் தூக்கிட்டு உயிரிழப்பு
பெண் தூக்கிட்டு உயிரிழப்பு

செங்கல்பட்டு:சென்னை புது பெருங்களத்தூர் பாரதி அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் அரவிந்த் (34); இவரது மனைவி கமலகுமுதவல்லி (30). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

கடந்த சில நாள்களாக கமலா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கமலகுமதவல்லி மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் இன்று (ஜன. 11) அதிகாலை அவரின் படுக்கையறை உள்பக்கமாகப் பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த கணவர் அரவிந்த் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு கமலகுமுதவல்லி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது, தகவலின் அடிப்படையில் விரைந்துசென்ற காவல் துறையினர், கமலகுமதவல்லியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதால், ஆர்டிஓ விசாரணைக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் காப்பாற்றுங்கள் என கதறிய இளைஞர், மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details