தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் திடீர் ஆய்வு; பணிக்கு வராத 4 மருத்துவர்கள் மீது நடவடிக்கை... பின்னணி என்ன?

By

Published : Dec 15, 2022, 9:08 PM IST

Updated : Dec 15, 2022, 9:29 PM IST

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராமல் இருந்த நான்கு மருத்துவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு
அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு, இன்று திடீர் ஆய்வுக்காக வந்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அமைச்சர் ஆய்வின்போது இன்று மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் 4 பேர் பணிக்கு வராதது தெரிய வந்தது.

இதனையடுத்து பணிக்கு வராத மகப்பேறு மருத்துவர் மெர்லின், மயக்கவியல் நிபுணர் பிரபா வடிவுக்கரசி, எலும்பியல் மருத்துவர் ஹர்ஷா பாலாஜி, தொண்டை காது மற்றும் மூக்கு மருத்துவர் கிருத்திகா ஆகிய நால்வர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

மேலும் மருத்துவமனையில் உரிய ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்காமல் அலட்சியமாக இருந்ததால், செங்கல்பட்டு நலப்பணிகள் இணை இயக்குநர் ரமாமணியை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:டோல்கேட்டுகளில் நடக்கும் அட்டூழியம்.. நாடாளுமன்றத்தில் நியாயம் கேட்ட திமுக எம்.பி.

Last Updated : Dec 15, 2022, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details