தமிழ்நாடு

tamil nadu

தாமதமான வாக்கு எண்ணிக்கை: தாம்பரத்தில் பரபரப்பு

By

Published : Oct 12, 2021, 10:16 AM IST

Updated : Oct 12, 2021, 10:31 AM IST

தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கும், 28 மாவட்டங்களில் விடுபட்ட பகுதிகளுக்கும் சேர்த்து ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே மும்முரமாக எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் பரபரப்பு
தாம்பரத்தில் பரபரப்பு

கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 6ஆம் தேதியன்றும் - ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 9ஆம் தேதியன்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

முதற்கட்டத் தேர்தலில் ஆறு மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 30 நபர்களும், 61 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 228 நபர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 34 நபர்களும், 37 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 156 நபர்களும் போட்டியிட்டனர்.

தாமதமான வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணும் மையங்கள்

அதற்கென மாவட்டத்திலுள்ள ஐந்து ஒன்றியங்களில் ஆயிரத்து 781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவானது நடைபெற்றது. இதில் இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 308 ஆண் வாக்காளர்கள், இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 224 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மொத்தம் ஐந்து லட்சத்து 34 ஆயிரத்து 530 வாக்காளர்கள் தங்களது வாக்கினைப் பதிவுசெய்தனர்.

பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு...

  • காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும்,
  • வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியதிற்கு காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,
  • உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உத்திரமேரூர் அருகே திருப்புலிவனத்திலுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,
  • ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பென்னலூர்ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும்,
  • குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சிக்கராயபுரம் ஸ்ரீ முத்துகுமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்

வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையம் எல்லையிலும் குன்றத்தூர் வாக்கு எண்ணிக்கை மையம் சென்னை பெருநகர காவல் நிலையம் எல்லையில் உள்ளன.

தாம்பரத்தில் பரபரப்பு

கைப்பேசி வைத்திருக்கு இவர்களுக்கு மட்டுமே அனுமதி

இன்று காலை 8 முதல் மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. முதற்கட்டமாக அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. முதலில் 302 மேசைகளில் ஆயிரத்து 208 பேர் வாக்குப் பிரித்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல் ஐந்து ஒன்றியங்களிலும் 569 மேசைகளில் மூன்றாயிரத்து 281 அரசுப் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப் பிரித்தல், வாக்கு எண்ணுதல் எந்தப் பதவி என்பதை அறிந்துகொள்ள வாக்கு எண்ணிக்கை மையம் நுழைவு வாயில், வாக்கு எண்ணிக்கை அறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் டிஜிட்டல் பேனர்கள் மூலம் பார்வை வடிவில் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாம்பரத்தில் பரபரப்பு

மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தேர்தல் பணியாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத் தேர்தல் பார்வையாளர் , மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாரப் பார்வையாளர் உள்ளிட்டோர் மட்டும் கைப்பேசி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தாமதமும் வாக்குவாதமும்

முகவர்கள், வேட்பாளர்கள் யாரும் கைப்பேசிகளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கொண்டுவர வேண்டாம் எனவும், மீறும்பட்சத்தில் நுழைவு வாயிலில் பறிமுதல்செய்யப்பட்டு மாலையில் திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் பரபரப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க மூன்று காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், 4 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 16 காவல் ஆய்வாளர்கள், 600 காவலர்கள் என 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஒருங்கிணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் தாம்பரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகத் தொடங்கியதால் வேட்பாளர்கள், முகவர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரங்கிமலை ஒன்றியத்தின் 15 ஊராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை தாம்பரம் தனியார் பள்ளியில் நடைபெற்றுவருகிறது.

உரிய அனுமதி அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதி

இந்த நிலையில் முதல் சுற்றில் திரிசூலம், பொழிச்சலூர், கவுல் பஜார் ஆகிய மூன்று ஊராட்சிகளின் வாக்கு எண்ணிக்கையானது தாமதமாகத் தொடங்கியது.

இதனால் வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்களிடம் முன்னேற்பாடுகள் எதுவும் முறையாகச் செய்யவில்லை எனவும், வாக்கு எண்ணிக்கை ஏன் தாமதமாகத் தொடங்கப்பட்டது என்றும் கேட்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உரிய அனுமதி அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து 200 மீட்டர் வரை பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: ரூ.12,000 கோடியைச் சீரழித்த பான் பராக் கறைகள் இனி உதவட்டும் சுற்றுச்சூழலுக்கு...!

Last Updated : Oct 12, 2021, 10:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details