தமிழ்நாடு

tamil nadu

அரியலூரில் விலையில்லா முகக் கவசங்கள் வழங்கும் பணி தொடக்கம்

By

Published : Aug 8, 2020, 2:33 PM IST

அரியலூர் : தமிழ்நாடு அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா  முகக் கவசங்கள் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

TN govt providing free face mask to family card holders in ariyalur
TN govt providing free face mask to family card holders in ariyalur

நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கரோனா தொற்று தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுகுடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இரண்டு முகக் கவசங்கள் வீதம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 440 நியாயவிலைக் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 லட்சத்து 98 ஆயிரத்து 678 முகக் கவசங்கள் வழங்கும் பணியை தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் இன்று தொடங்கி வைத்தார்

இந்நிகழ்வில் பேசிய அவர், பொது மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வரும்போது முகக் கவசங்கள் அணிந்து தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details