தமிழ்நாடு

tamil nadu

விவசாய நிலத்தில் கிடைத்த சிவலிங்கம் - வியப்பில் கிராம மக்கள்!

By

Published : Jul 30, 2019, 3:36 PM IST

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்தில் இருந்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

siva idol

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்திலிருந்த கரையான் புற்றை அகற்ற முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று அந்த கரையான் புற்றை அகற்றிய போது அதிலிருந்து சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையும் கண்டெடுக்கப்பட்டன.

விவசாய நிலத்தில் கிடைத்த சிவலிங்கம்

இதனைத்தொடர்ந்து இரண்டையும் எடுத்து நீரில் அபிஷேகம் செய்து அதனை தனது நிலத்தின் அருகே வைத்து வழிபட்டார். இதனை அறிந்த சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த மக்களும், சிவனடியார்களும் நேரில் வந்து ஆவுடையப்பன் சிவலிங்கத்தை வழிபட்டுச் செல்கின்றனர்.

விவசாய நிலத்தில் கிடைத்த சிவலிங்கம்

இதுகுறித்து விவசாயி நடராஜன் கூறுகையில், எனது தாத்தா அந்த நிலத்தில் ஆவுடையப்பன் கடவுள் இருப்பதாகவும் அதை வணங்கி வழிபட்டு விவசாயம் செய்ய வேண்டும் என கூறுவார். ஆனால் காலப்போக்கில் அது மறைந்து போனது. தற்போது அந்த லிங்கம் கிடைத்துள்ளது என்றார்.

Intro:அரியலூர் - விவசாயி நிலத்தில் சிவலிங்கம் மற்றும் நந்தி கண்டெடுப்புBody:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கரையான் புற்று இருந்ததால் அதனை அகற்றிய போது சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து நடராஜன் கூறும்போது தனது தாத்தா நமது நிலத்தில் ஆவுடையப்பன் கடவுள் இருப்பதாகவும் அதை வணங்கி வழிபட்டு விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் காலப்போக்கில் அது மறைந்து போனதால் தெரியாமல் இருந்து கரையான் புற்றாள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்பொழுது வேலை வைப்பதற்காக நிலத்தை சரி செய்யும் பொழுது அதில் தென்பட்ட லிங்கத்தை காரைக்குறிச்சி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது அங்கு வந்த சிவனடியார்களுடன் கேட்ட பொழுது அவர்கள் நேரில் வந்து பார்ப்பதாக கூறினார்கள்.

இதனைத்தொடர்ந்து நேற்று வந்து பார்த்து அவற்றை தோண்டி எடுத்து கூறி பின்பு தோன்றி எடுத்ததில் சிவலிங்கமும் நந்தியும் தென்பட்டது இதனை எடுத்து அபிஷேகம் செய்து பொது மக்கள் வழிபட்டு வருகின்றனர்.



Conclusion: இதனை அறிந்த சுற்றுப்பகுதியில் உள்ள மக்களும் சிவனடியார்களும் நேரில் வந்து ஆவுடையப்பன் சிவலிங்கத்தை வழிபட்டுச் செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details