தமிழ்நாடு

tamil nadu

2021 தேர்தல் திருவிழா: அரியலூரில் 2 லாரி குக்கர் பறிமுதல்!

By

Published : Feb 27, 2021, 4:49 PM IST

அரியலூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரண்டு லாரியில் வந்த 12 லட்சம் மதிப்பிலான அமமுகவினரின் குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2021 தேர்தல் திருவிழா: அரியலூரில் 2 லாரி குக்கர் பறிமுதல்!
2021 தேர்தல் திருவிழா: அரியலூரில் 2 லாரி குக்கர் பறிமுதல்!

அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி சமத்துவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கும்மிடிபூண்டியிலிருந்து தஞ்சைக்கு வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு லாரி வெறும் பெட்டி எனக் கூறி டிமிக்கு கொடுத்து கிளம்பி சென்றது.

மற்றொரு லாரியை மறித்து விசாரணை மேற்கொண்டதில், அதில் குக்கர் இருப்பதும் அதில் தஞ்சை மாவட்ட அமமுகவினர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா என ஜெயலலிதா படமும் டிடிவி தினகரன் படமும் போட்டு கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்து.

இதையடுத்து பறக்கும் படையினர் திருமானூர் கொள்ளிடம் பாலம் சோதனை சாவடிக்கு தொடர்பு கொண்டு, மற்றொரு லாரியை பறிமுதல் செய்ய உத்திரவிட்டனர். இதனைத்தொடர்ந்து இரண்டு லாரிகளையும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இரண்டு லாரிகளிலும் 12 லட்சம் மதிப்பிலான 3,520 எண்ணிக்கையிலான குக்கர்கள் இருந்தது தெரியவந்தது. இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...திமுக நேர்காணல் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details