தமிழ்நாடு

tamil nadu

நோவாக் ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய விசா ரத்து

By

Published : Jan 6, 2022, 6:22 PM IST

Updated : Jan 7, 2022, 6:35 AM IST

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர், ஒன்பது முறை ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவாக் ஜோகோவிச்சின் விசாவை ரத்துசெய்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நோவக் ஜோகோவிச்
நோவக் ஜோகோவிச்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்புக் குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஜோகோவிச் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து எந்தவிதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், போட்டி அமைப்புக் குழுவினரிடம் மருத்துவ விலக்கு கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு (ஜனவரியில் 5) மெல்போர்ன் விமான நிலையம் வந்த நோவாக் ஜோகோவிச் விசா ரத்துசெய்யப்பட்டது. இதனால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் செர்பியா திரும்பினார்.

மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் ஜோகோவிச் விசா ரத்துசெய்யப்பட்டதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், "சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்திற்கு மேலானோர் யாருமில்லை. கரோனா சூழலில் பாதுகாப்பில் சமரசம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் பங்கேற்க முடியாமல் போனதால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியா பயமாக இருந்தால், பாகிஸ்தான் செல்லுங்கள்- பிரதமருக்கு காங்கிரஸ் அறிவுரை!

Last Updated :Jan 7, 2022, 6:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details