தமிழ்நாடு

tamil nadu

அந்தச் சம்பவம், வாழ்க்கைக்காக பாடம் - நோவக் ஜோகோவிச்

By

Published : Sep 14, 2020, 9:03 PM IST

2020ஆம் ஆண்டுக்கான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்று போட்டியின்போது, விரக்தியில் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக லைன் நடுவரைத் தாக்கியதால் ஜோகோவிச் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

i-learned-a-big-lesson-from-us-open-default-novak-djokovic
i-learned-a-big-lesson-from-us-open-default-novak-djokovic

2020ஆம் ஆண்டுக்கான யு.எஸ்.ஓபன் தொடரில் ஃபெடரர், நடால் இருவரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தவுடன், அனைவரின் கண்களும் ஜோகோவிச் பக்கம் சென்றது. அவர் ஆடப்போவதாக அறிவித்தவுடன் நிச்சயம் கோப்பையை வென்று 18ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லப் போகிறார் என டென்னிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் நான்காவது சுற்று போட்டியின்போது ஜோகோவிச் விரக்தியில் அடித்த பந்து, எதிர்பாராவிதமாக லைன் நடுவரைத் தாக்க, விதிகளின்படி ஜோகோவிச் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 29 போட்டிகளில் தோல்வியின்றி வலம் வந்த ஜோகோவிச்சின் இந்தப் பயணம் முடிவுக்கு வந்தது.

லைன் நடுவரைத் தாக்கியதால் ஜோகோவிச் தொடரிலிருந்து தகுதிநீக்கம்

இது குறித்து ஜோகோவிச் கூறுகையில், ''நான் எப்படி உடல்ரீதியாக பயிற்சி எடுக்கிறேனோ, அதேபோல் தான் மனரீதியாகவும், உணர்ச்சிகள்ரீதியாகவும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என்னால் முடிந்தவரை களத்திலும், களத்திற்கு வெளியேயும் சிறந்த மனிதனாக இருக்க விரும்புகிறேன்.

அந்த நேரத்தில் நான் விரக்தியடைந்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனால் இந்தச் சம்பவம் வாழ்க்கைக்கான பாடமாக இருக்கும். இன்னும் அந்தச் சூழலில் இருந்து வெளிவர முடியவில்லை. எனது அணியுடன் பேசி வருகிறேன். இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். அதைப்பற்றி சிந்திக்காமல் அடுத்த வேலையை செய்ய வேண்டும்.

அந்தச் சூழலில் நான் அவ்வாறு நடக்கும் என சற்றும் யோசிக்கவில்லை. ஆனால் விதிகளின்படி தான் நான் வெளியேற்றப்பட்டுள்ளேன். எனவே அதை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த நாளும், அந்தச் சம்பவமும் என் வாழ்வில் நிச்சயம் மறக்க முடியாதவை. என் வாழ்வு முழுமைக்கும் பயணப்படும் என நினைக்கிறேன்.

இதிலிருந்து வெளிவந்து டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பது பெரிய விஷயமாக இருக்காது'' என்றார்.

இதையும் படிங்க:யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய டொமினிக் தீம்!

ABOUT THE AUTHOR

...view details