தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கு விதிகளை மீறிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்...!

By

Published : May 5, 2020, 3:09 PM IST

மாட்ரிட்: கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் மீறியுள்ளார்.

djokovic-appears-to-break-confinement-rules-in-spain
djokovic-appears-to-break-confinement-rules-in-spain

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஸ்பெயினில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 301ஆக உள்ளது. 25 ஆயிரத்து 428 பேர் உயிரிழந்தனர். இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவில் திங்கள் கிழமை முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில் விளையாட்டு வீரர்கள் அவரவர்களின் பயிற்சியைத் தொடங்கலாம். ஆனால் மைதானங்கள் மூடப்பட்டே இருக்கும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் செர்பிய நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டென்னிஸ் கோர்ட்டில் இருந்து டென்னிஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு, களிமண் ஆடுகளத்தில் ஆடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.

இதனால் சிலர் ஜோகோவிச் அரசு விதிகளை மீறியதாகக் கூறியுள்ளனர். அவர் விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பேனிஷ் டென்னிஸ் ஃபெடரேஷன் கூறுகையில், '' விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் விரைவாக அறிவிக்கப்படும். அதுவரை வீட்டிலேயே பயிற்சி செய்யுங்கள்'' என அறிவுறுத்தியுள்ளன.

இதையும் படிங்க:எச்சிலை தடவாமல் பந்தை ஸ்விங் செய்ய என்ன பண்ணலாம்? வார்னே கூறும் சூப்பர் ஐடியா

ABOUT THE AUTHOR

...view details