தமிழ்நாடு

tamil nadu

'என்னை தூக்கிவிட்டவர் அவர்' - எஸ்.பி.பி குறித்து சதுரங்க வீரர் விஸ்வநாதன் உருக்கம்!

By

Published : Sep 26, 2020, 10:39 AM IST

Updated : Sep 26, 2020, 10:59 AM IST

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாடகர் எஸ்பிபி நேற்று (செப். 25) சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இது தொடர்பாக தனது இரங்கலை சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Vishwanathan anand tweet on SPB demise
Vishwanathan anand tweet on SPB demise

சென்னை:பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்குப் பிரபல சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றினால் ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சூழலில் உலகளவில் உள்ள ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அந்நேரத்தில் அவரின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகமும், அவரது மகன் எஸ்.பி. சரணும் கூறினர்.

ஆனால், திடீரென நேற்று முன்தினம் (செப். 24) அவரது உடல்நிலை அபாயக் கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை மிகவும் கவலைக்கிடமான முறையில் அவர் உடல்நிலை இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதையடுத்து, நண்பகல் 1:30 மணியளவில் எஸ்.பி. சரண் மருத்துவமனையின் வெளியே நின்றிருந்த செய்தியாளர்களிடம், தனது தந்தை நண்பகல் 1.04 மணிக்கு காலமானார் என்ற செய்தியைக் கூறினார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் என அனைத்திலும் தொற்றிக்கொண்டது எஸ்பிபி இறப்புச் செய்தி. இது தொடர்பாக திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்கள் இரங்கல் பதிவுகளையும், சோகக் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, பிரபல இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "இவ்வளவு பிரபலமான, எளிமையான நபர் காலமானதைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் எனது முதல் ஸ்பான்சர்!

அவர் 1983ஆம் ஆண்டில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் எங்கள் அணி 'சென்னை கோல்ட்ஸ்'க்கு நிதியுதவி செய்தார். நான் சந்தித்த மிகச்சிறந்த நபர்களில் ஒருவர். அவரது இசை எங்களுக்கு அத்தகைய மகிழ்ச்சியை அளித்தது" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Last Updated :Sep 26, 2020, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details