தமிழ்நாடு

tamil nadu

உசேன் போல்ட்டுக்கு இரட்டை குழந்தைகள்: வைரலாகும் புகைப்படம்

By

Published : Jun 22, 2021, 9:43 AM IST

ஒலிம்பிக் தங்க நாயகன் உசேன் போல்டின் இரட்டைக் குழந்தைகளின் பெயரும், புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

Usain Bolt
உசேன் போல்டு

உலகின் அதிவேக மனிதராக அழைக்கப்படும் உசேன் போல்ட்டுக்கு, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது, குழந்தையின் புகைப்படங்களும், பெயரும் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.

இவருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 20) இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஆண் ஒன்று, பெண் ஒன்று. அவர் தனது குழந்தைகளுக்கு செயின்ட் லியோ போல்ட், தண்டர் போல்ட் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

உசேன் போல்ட்டுக்கு இரட்டை குழந்தைகள்

உசேன் போல்ட்டுக்கு 'லைட்டினிங் போல்ட்' என்று மற்றொரு பெயரும் உண்டு. அதையே, தனது மூத்த மகளுக்குப் பெயராகச் சூட்டியது குறிப்பிடத்தக்கது. தந்தையர் நாளன்று அவர் மகிழ்ச்சியுடன் பதிவிட்ட குடும்பப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க:WTC FINAL: மழைக்கு பலியான நான்காம் நாள் ஆட்டம்; கைவிட்டுப்போகுமா கோப்பை?

ABOUT THE AUTHOR

...view details