தமிழ்நாடு

tamil nadu

Chennai Open: இந்திய அணி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

By

Published : Feb 14, 2023, 7:10 AM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டியின் முதல் நாளான நேற்று 2 இந்தியா வீரர்கள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சென்னை ஓபன்
சென்னை ஓபன்

சென்னை: ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் (பிப்.12) தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று பிரதான போட்டிகள் தொடங்கியுள்ளன.இன்று (பிப்.14) மொத்தம் 11 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொள்கின்றனர்.

நேற்றைய போட்டியின் முதல் சுற்றில் கொரியரை சார்ந்த ஜி சங் நாம் உடம் இந்திய விரர் சுமித் நாகல் பலப்பரீட்சை செய்தனர். அதில் 6-1, 6-3 என்ற கணக்கில் ஜி சுங் நாமை சுமார் 1 மணி நேரம் 28 நிமிடங்களில் தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் தைவான் ஜேசன் இந்திய வீரர் சசிகுமாரை எதிர் கொண்டார்.

இதில் முதல் நிலை வீரரான ஜேசனை 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சுமார் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் விளையாடி தோற்கடித்தார். அடுத்ததாக ஆஸ்திரேலியா வீரர் ஜெயம் சூடு மற்றும் இந்திய வீரர் திப் பிரதாப் சிங் இருவரின் ஆட்டத்தில் 2-6, 6-7 என்ற செட் கணக்கில் ஜேம்ஸ் மெக்கேபிடம் திப் பிரதாப் சிங் போராடி தோல்வியடைந்தார்.

இதையும் படிங்க: 'நோய்வாய்ப்பட்ட சமூகத்தையும், தீங்கு விளைவிக்கும் கலாசாரத்தையும் போதைப்பொருட்கள் உருவாக்கியுள்ளன'

ABOUT THE AUTHOR

...view details