தமிழ்நாடு

tamil nadu

தேசிய தடகளப் போட்டியில் கலக்கிய திருச்சி மாணவர்கள்!

By

Published : Aug 12, 2021, 7:33 AM IST

பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் திருச்சி கல்லூரி மாணவி கெவினா அஸ்வினி, மாணவர் செல்வபிரபு ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

தேசிய தடகளப் போட்டியில் கலக்கிய திருச்சி மாணவர்கள்
தேசிய தடகளப் போட்டியில் கலக்கிய திருச்சி மாணவர்கள்

திருச்சி: 19ஆவது தேசிய ஃபெடரேசன் கோப்பைக்கான இளையோர் தடகளப் போட்டிகள் கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதிவரை பஞ்சாப் மாநிலம், சங்குரூரில் நடைபெற்றது.

இரண்டு வெள்ளிகள்

இதில் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவி கெவினா அஸ்வினி உயரம் தாண்டுதல் போட்டியில் 1.66மீ தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தொடர்ந்து பதக்கம் வென்ற மாணவியை கல்லூரி முதல்வர், உடற்கல்வி துறை பேராசிரியைகள் பாராட்டினர்.

இதேபோல் திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர் செல்வப்பிரபு, டிரிபிள் ஜம்ப் போட்டியில் 14.80மீ தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

வருங்கால ஒலிம்பியன்ஸ்

நடந்த முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கின், தடகளப் பிரிவில் பங்கேற்ற தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்நிலையில், வருங்காலத்தில் கெவினா அஸ்வினி, செல்வபிரபு ஆகியோரும் இவர்களைப் போலவே ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு சாதிப்பர் என ஆசிரியர்களும் பெற்றோரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்!

ABOUT THE AUTHOR

...view details