தமிழ்நாடு

tamil nadu

Australian Open 2022: ஸ்பெயின் காளையிடம் சிக்கிய ரஷ்ய கன்றுக்குட்டி.. 21 கிராண்ஸ்ட்லாம் வென்று ரபேல் நடால் உலக சாதனை!

By

Published : Jan 30, 2022, 7:43 PM IST

ஆஸ்திரேலியா ஓபன் 2022 போட்டியில் வென்றதன் மூலம் ரபேல் நடால் 21 கிராண்ஸ்ட்லாம் பட்டங்கள் வென்று வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார். ஸ்பெயின் காளை ரபேல் நடாலை எதிர்கொண்ட ரஷ்ய வீரர் 5 சுற்றுகளில் 2ஐ மட்டும் வென்று தோல்வியை தழுவினார்.

Rafael Nadal
Rafael Nadal

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு 6ஆவது முறையாக ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறினார்.

முன்னதாக பரபரப்பான அரையிறுதி போட்டியில் ரபேல் நடால், பிரான்சின் மடியோ பிரெட்னியை 6-3,6-2,3-6,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கொக்கரித்தார்.

ரபேல் நடால்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் ( Australian Open 2022) ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று (ஜன.30) மெல்போர்னில் உள்ள (Rod Laver Arena) ராட் லேவர் அரங்கில் நடந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (Rafael Nadal), ரஷ்ய இளம் வீரர் டேனியல் மெட்வெடேவ் (Daniil Medvedev)-விடம் (6-2 மற்றும் 7-6, 2-3) தோல்வியை தழுவினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு ஆக்ரோஷமாக ஆடிய ரபேல் நடால் அடுத்த இரண்டு சுற்றுகளை (6-4 மற்றும் 6-4) தனதாக்கினார்.

ரஷ்ய இளம் வீரர் டேனியல் மெட்வெடேவ்

இந்நிலையில், கிராண்ஸ்ட்லாம் பட்டத்தை நிர்ணயிக்கும் வாழ்வா-சாவா போட்டியில் ரபேல் நடால் முதலில் ஆதிக்கம் செலுத்தி விளையாடினார். உண்மையை சொல்லப் போனால் டேனியல் மெட்வெடேவ் ஆல், ஈடுகொடுக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து 5ஆவது சுற்றில் ரபேல் நடாலிடம் டேனியல் மெட்வெடேவ் தோல்வியை தழுவினார். இதையடுத்து 5 சுற்றுகள் கொண்ட போட்டியில் 3இல் வென்று ரபேல் நடால் சாம்பியன் ஆனார்.

இதன்மூலம் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரர் என்ற அரிய சாதனையையும் எட்டிப் பிடித்தார்.

இதையும் படிங்க :ஆஸ்திரேலியன் ஓபன்: அரையிறுதிச்சுற்றில் மெத்வதேவ்!

ABOUT THE AUTHOR

...view details